அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட இருந்தனர். இதையடுத்து தேர்தலிருந்து ஜோ பைடன் விலகியிருந்த நிலையில், அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி அறிவித்தது.
அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் தற்போது பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர், கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்றிஸ் எவன்ஸ், நடாஷாவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஹல்க்காக நடித்த மார்க் ருஃப்பால்லோ, விஷனாக நடித்த பால் பெட்டானி, வார் மெஷினாக நடித்த ஜேம்ஸ் ரோட்ஸ், ஓகோயேவாக நடித்த டானாய் குரீரா ஆகியோர் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.