ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் கஜினிகாந்த் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் நடிகர் ஆர்யா பேசும்போது.... "இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்" என்றார்.