![arul nithi movie Kazhuvethi Moorkkan teaser released](http://image.nakkheeran.in/cdn/farfuture/QwDb-dbfGwywkEB7_v5nnc3nuHNCs8X6PO8Pv6d57lk/1682147587/sites/default/files/inline-images/27_58.jpg)
அருள் நிதி நடிப்பில் ராட்சசி பட இயக்குநர் கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ' கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஐகானை கார்த்தி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரை பார்க்கையில், அருள்நிதி ஒருவரை கொலை செய்கிறார். அவரை பிடிப்பதற்கு போலீசார் ஒரு டீமை அமைத்து தேடுகின்றனர். அருள்நிதி என்ன காரணத்திற்காக கொலை செய்தார், போலீஸ் அவரை பிடித்ததா என்பதை விரிவாக சொல்லுவது போல் அமைந்துள்ளது.
ஆக்ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த டீசரில் சண்டை காட்சிகளில் அருள்நிதி கம்பீரமாக தோன்றுகிறார். இதில் வரும் சில வசனங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. "அரசியல்ல மேல ஏற ஏற...கொத்துறத்துக்கு பாம்பு வரும்; குத்துறதுக்கு கத்தியும் வரும்", "எங்களை அடுத்த இடத்துக்கு கூப்பிட்டு போகாட்டியும் பரவால்ல ஆனா... எங்களை 50 வருஷத்துக்கு பின்னாடி கொண்டு போய் விட்றாதீங்க", "கொலை பண்றது வீரம் இல்ல... பத்து பேர காப்பாத்துறது தான் வீரம்" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அருள் நிதி கடைசியாக பேசும், "காப்பாத்த தான்டா சாமி..., சாமி பேர சொல்லிக்கிட்டு வெட்டிக்கிட்டு சாவிங்கன்னா... உங்களுக்கெல்லாம் சாமி கும்பிடறதுக்கே தகுதி இல்லடா.." என பேசும் வசனம் வைரலாகி வருகிறது. இந்த படம் மே மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.