கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அர்ஜுன் தாஸ், அடுத்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'அங்கமாலி டைரீஸ்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தை கேடி என்கிற கருப்புதுரை படத்தை இயக்கிய மதுமிதா இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது எனது முதல் இந்தி படம். எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த கடிதம் எழுதும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன. முதலில் விஜய் சாருக்கும், லோகேஷுக்கும் நன்றி. இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உங்கள் இருவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். உங்களில் நிறைய பேருக்கு நான் ஏன் இவர்களுக்கு நன்றி சொல்கிறேன் என ஆச்சரியமாக இருக்கலாம். நான் மாஸ்டர் படம் மட்டும் நடிக்காமல் இருந்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. அதனால் தான் அவர்களுக்கு நன்றி சொன்னேன். நான் இந்த இந்தி பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், முதலில் பெற்றோர்கள், விஜய் சார், லோகேஷ் மற்றும் விக்னோவிடம் மட்டும் தான் சொன்னேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
@vikramix @Abundantia_Ent @memadhumita @actorvijay @Dir_Lokesh @vvignarajan #ForeverGrateful https://t.co/8oxhBRIJs7 pic.twitter.com/6NRLfpd7Ei— Arjun Das (@iam_arjundas) June 30, 2022