Published on 04/09/2018 | Edited on 04/09/2018
மணிரத்தினத்தின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அதேபோல் தனது குரு மணிரத்தினம்தான் என பல மேடைகளில் கூறியிருக்கிறார் ரகுமான். இருவருக்குமே அப்படி ஒரு பிணைப்பு தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. ரகுமானை அறிமுகப்படுத்தியவர் மணிரத்தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப்படம் முதல் தற்போது வெளியாகவுள்ள செக்க சிவந்த வானம் வரை அனைத்து படங்களுக்கும் ரகுமான்தான் இசையமைப்பார்.
செக்கசிவந்த வானம் படத்தின் பாடல்கள் செப்டம்பர் 5ல் வெளியாகவுள்ள நிலையில் அதன் அனைத்து பாடல்களையும் மேடையில் லைவ்வாக அவரே பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழா சென்னையில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.