
தெலுங்கு படங்களுக்கு தற்போது இசையமைத்து வரும் அனிருத் அடுத்தாக தமிழ் கோலமாவு கோகிலா, ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இசையமைக்கிறார். மேலும் கடந்த காதலர்தினத்தையொட்டி ஜூலி என்ற ஆல்பம் பாடலை வெளியிட்ட அவர் நடிகைகள் பாணியில் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பெண் வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பெண் அமர்ந்திருப்பது போல் இருக்கும் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த புகைப்படத்தில் பெண்வேடமிட்டிருப்பது அனிருத் என்று பரவலாக பேசப்படுகிறது. பெரும்பான்மையாக முதலில் பார்த்தவர்கள் அனைவரும் யார் இந்த பெண்..? புதுமுக நடிகையா...? என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அது அனிருத் தான் என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர். மேலும், தற்போது இந்த புகைப்படம் இணைய தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எது எப்படியோ இந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தா இல்லையா என்று அவர் தான் விளக்கமளிக்க வேண்டும்.