
பிரபல டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். போட்டி இன்று(22.03.2025) முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தியாவில் பல்வேறு மாநகரங்களில் நடைபெறும் இந்த தொடர் மே மாதம் வரை நடைபெறுகிறது. முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம் போல் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதே சமயம் போட்டி நடைபெறும் மற்ற 12 மைதானங்களிலும் முதல் போட்டி தொடங்குவதற்கு முன் தொடக்க விழா நடக்கிறது.அதன் படி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் முதல் போட்டி நடக்கவுள்ள நாளை(23.03.2025) மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரை இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்ராஜ் கேய்க்வாட் தலைமையிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகளாக இருப்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.