நடிகர் அஜித்குமார் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று பார்த்தால் திடீரென்று ஆசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார். சற்று குழப்பமாக இருக்கிறதா? அஜித் பைக் ரேசர், கார் ரேசர், நல்ல குக், போட்டோகிராஃபர் என்று பன்முகத் திறன்கொண்டவர். சில ஆண்டுகளாகவே சிறிய ரக விமானங்கள் செய்து அதனை பறக்க விடுவது என்று ஏரோனாட்டிக்ஸ் துறையின் மீதும் அஜித்திற்கு ஆர்வம் ஏற்பட்டு அதுபற்றி கற்றுக்கொண்டிருந்தார்.
தற்போது அஜித்தை அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (MIT) ஹெலிகாப்டர் சோதனை விமானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இங்கு வந்து அஜித் வகுப்பெடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. அதனை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளாராம்.