Skip to main content

சென்னை தமிழ் பேச ஈஸி...லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 27/03/2018 | Edited on 28/03/2018

aishwarya rajesh


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுசுடன் வடசென்னை, விக்ரமுடன் துருவநட்சத்திரம், மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம், அருண்ராஜா காமராஜா இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இடம் பொருள் ஏவல் படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ள நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திரத்தை பற்றி பேசுகையில்..."வடசென்னை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நானும் சென்னைப்பெண். எனவே, சென்னை தமிழ்பேசி நடித்ததில் எந்த கஷ்டமும் தெரியவில்லை. கவுதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கும் போது, ஆரம்பத்தில் சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் கவுதம்மேனன் பாணிக்கு என்னை மாற்றிக்கொண்டேன். இப்போது அப்படி நடிக்க பழகிவிட்டது. மணிரத்னம் சார் படத்தில் நடிப்பதை எனது திரை உலக பயணத்திலேயே பெரிய விஷயமாக கருதுகிறேன். அவருடைய படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்து இருந்தாலும் நடித்திருப்பேன். இந்த படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வேடத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. நிச்சயம் இது பேசப்படும் பாத்திரமாக இருக்கும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் மட்டுமே இயக்கும் நடமாடும் டீ கடை! அசந்துபோன ஐஸ்வர்யா ராஜேஷும், நாசரும்! (படங்கள்)

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய, முழுவதும் பெண்களால் மட்டுமே இயக்கப்படுகிற ஆட்டோவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டீ கடையின் துவக்க விழாவில்  நடிகர் நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வருமான வரி கூடுதல் ஆணையர் நந்தகுமார் ஐஆர்எஸ், விஜிபி தலைவர் விஜிபி சந்தோசம், ஸ்பெயின் கவுன்சில் ஜெனரல் டோனி லோபோ, இயக்குநர் எஸ்.எம்.வசந்த், பர்வீன் டிராவல்ஸ் இயக்குநர் சாதிக்  மற்றும் எம் ஆட்டோ தலைவர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

விழாவில் பேசிய நிர்வாக இயக்குனர் முகமது ரஹ்மத்துல்லா “தமிழ்நாட்டில் தேயிலை நுகர்வு என்பது மிகப்பெரியது. டீ கடை இல்லாமல் ஒரு தெருவைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான இந்த சூழலில் ஒரு நிலையான டீ கடையை வைத்திருப்பதை விடவும் இது சிறந்தது. பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஐ.டி பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பகுதிகளில் எளிய முறையில் விற்பனை செய்ய இந்த நடமாடும் டீ கடைகள் உதவுகின்றன” என்று கூறினார். தொடர்ந்து பேசிய கில்லி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வில்லியம் ஜெயசிங், கில்லி சாய் ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற 50 ரெட்ரோ ஃபிட் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதோடு இந்த அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தனது கிளைகளைத் துவங்கி  2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் கில்லி சாய் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். இது தவிர, டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் மற்றும் பெரம்பூரில் ஒரே நாளில் மற்ற மூன்று மோட்டார் கில்லி சாய் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், தங்கள் கடைகள் அனைத்திலும் பாலின பாகுபாடு இன்றியும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார். 
 

விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பெண்கள் மட்டும் இயக்ககூடிய இந்த டீ கடை போன்ற புது முயற்சிகள் பெண்களுக்கான சுயமுன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்காக சமூக அங்கிகாரத்தையும் வழங்குவதாக வாழ்த்து தெரிவித்தனர். 

 

 

 

 

Next Story

நோட்டா நாயகனுடன் செல்பி எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் 

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
aishwarya rajesh

 

 

 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நோட்டாவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வடசென்னை படமும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அதில்... "விஜய் தேவரகொண்டாவுடன் எனது முதல் தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது" என்று குறிப்பிட்டுள்ளார். கிரந்தி மாதவ் இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாகவும் நடிக்கிறார். மேலும் இதில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.