
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசிய சவீதா ரெட்டி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்புபடுத்தும் கதாபாத்திரமாக நடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் படி மேலே எகிறியுள்ளது.