'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்', 'செல்ஃபீ'', 'ஐங்கரன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் 'இடிமுழக்கம்' மற்றும் தங்கர் பச்சான் இயக்கத்தில் '13' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'இடிமுழக்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், " 27 வருடங்களுக்கு பிறகு அதே நபரை சந்திக்கிறேன். அப்துல்ஹமீத் சார் " எனக் குறிப்பிட்டு 27 வருடங்களுக்கு முன்னாள் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தற்போது அவருடன் எடுத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் நேற்று(10.6.2022) நடந்த ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
After 27 years … meeting the same person #abdulhameed sir … pic.twitter.com/eSzoygSrzl— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2022