
'காற்று வெளியிடை' படத்தையடுத்து தற்போது மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வரும் நடிகை அதிதிராவ் தற்போது ஹிந்தியிலும் கணிசமான படங்களில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் அவர் இசையில் வெளிவந்த 'யுவா' ஹிந்தி பட பாடலை பாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். இந்நிலையில் தனக்கு பிடித்தமான இயக்குனர் பற்றியும், சினிமா வாய்ப்புகள் பற்றியும் ஒரு பேட்டியில் பேசும்போது...."நான் சிறுவயதிலேயே மணிரத்னம் ரசிகை. அவருடைய 'பம்பாய்' படத்தை பார்த்து மனிஷா கொய்ராலா மாதிரி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காகவே நடனம் கற்றேன். அதன் பிறகு எனக்கு பிடித்த மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கீழே குதிக்க சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன். நடிகர், நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் மணிரத்னம் திறமையானவர். வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. சினிமா குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் ஆதரவால் எளிதாக வளர முடியும். அது இல்லாதவர்கள் முன்னேறுவது கஷ்டம். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். என்னை தூக்கி விட உறவினர்கள் யாரும் சினிமாவில் இல்லை. கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்புகள் தேடினேன். இன்னும் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம் அமையவில்லை" என்றார்.