'எங்கேயும் எப்போதும்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோதினி, இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின்பு ஆண்டவன் கட்டளை, கோமாளி, சூரரைப் போற்று உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அரசியல் தொடர்பான தனது கருத்தைப் பகிர்ந்து வந்தார். அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த வீடியோ வைரலானது. இந்நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதனை ட்விட்டரில் தெரிவித்த வினோதினி நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், "கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தான்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?
அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து... இந்து மதக் கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?
அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒருமுறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் டீபக் (debug) பண்றதுக்கு காசில்ல சாமி..." என இந்த உரையாடல் தொடர்கிறது.
இறுதியில் மய்ய அரசியல் தன்னுடைய அரசியலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல… pic.twitter.com/BTtR8dN9SL— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) June 13, 2023