Skip to main content

"இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும்" - நடிகர் ரியோ ராஜ்

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

htjdetjd


சரேகமா மற்றும் நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா, ஜி.பி. முத்து ஆகியோர் நடிப்பில் ‘என்ன வாழ்க்கடா’ ஆல்பம் பாடலை தயாரித்துள்ளன. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். இப்பாடலை கடந்த 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். இப்பாடலின் அறிமுக விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஆல்பம் குழுவினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரியோ ராஜ் பேசியபோது...

 

bdsbds

 

"ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இதில் வேலை செய்த அனைவரையுமே எனக்கு நன்கு தெரியும். நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் எந்த வேலையையும் மிகச்சிறப்பாக செய்வார்கள். இந்தப் பாடலையும் கண்டிப்பாக வெற்றியடையச் செய்வார்கள். சரேகமா தென்னிந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி. இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் நிறைய வர வேண்டும். நிறைய திறமையாளர்கள் வர வேண்டும். ஜி.பி. முத்து அண்ணண் இப்பாடலில் நடித்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள்" என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்