Skip to main content

குவியும் வாழ்த்து... சந்தோஷத்தில் திளைக்கும் நடிகர் சிவகுமார் குடும்பம்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

sivakumar


நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி, 'பருத்திவீரன்' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் பலரையும் தன் பக்கம் ஈர்த்தார். ஒவ்வொரு படங்களிலும் புதுமையான கதைக்கருவைக் கொண்டு நடித்து வருகிறார். தற்போது 'சுல்தான்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு, பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு 'உமையாள்' எனப் பெயர் சூட்டினார்கள். 

 

அதையடுத்து, சுமார் 7 ஆண்டுகள் கழித்து, தற்போது கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதனால், நடிகர் சிவகுமாரின் குடும்பம் மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்களாம். 

 

 

சார்ந்த செய்திகள்