Skip to main content

"நம் திட்டங்கள் முடிக்கப்படாமலே போய்விட்டது" - அபிஷேக் பச்சன் வருத்தம்!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
hrsgs

 

 

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அன்புள்ள நிஷி. நம் திட்டங்கள் முடிக்கப்படாமலே போய்விட்டது.... அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும். ??

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக் படப்பிடிப்பில் விபத்து... அபிஷேக் பச்சனுக்கு அறுவை சிகிச்சை!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Abhishek Bachchan

 

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படம் முழுவதும் தனி நபராக பார்த்திபன் திரையில் தோன்றி நடித்தது இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.

 

இந்த நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தியில் நடிகர் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக அபிஷேக் பச்சன் மும்பை விரைந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

 

இது குறித்து தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அபிஷேக் பச்சன், அறுவை சிகிச்சை தனக்கு நல்லமுறையில் நடந்ததாகவும், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

"உங்கள் கண்களில் உள்ள மின்னலை நினைவில் கொள்வேன் சார்" - தனுஷ் பட நடிகை வேதனை!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
sfS

 

 

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் தனுஷின் அம்பிகாபதி பட நடிகை சுவாரா பாஸ்கர் மறைந்த நிஷிகாந்த் கமத்துக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"உங்கள் புன்னகையின் அரவணைப்பையும், உங்கள் கண்களில் உள்ள மின்னலையும் நான் எப்போதும் நினைவில் கொள்வேன் நிஷி சார்! #DombiviliFast #MumbaiMeriJaan படங்களின்போது நடந்த உரையாடல்களுக்கு நன்றி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் நிஷிகாந்த் காமத்" என கூறியுள்ளார்.