இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செய்தி வந்த நிலையில், சற்று தாமதமாக அறிவிக்கப்பட்டது. தேர்வுக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் வசந்த் இடம் பெற்றிருந்தார். 69வது தேசிய திரைப்பட விருது பட்டியல் பின் வருமாறு....
சிறந்த தமிழ் படம் - கடைசி விவசாயி (மணிகண்டன்)
சிறந்த தெலுங்கு படம் - உப்பென்னா (சனா புச்சிபாபு)
சிறந்த சண்டை பயிற்சியாளர் - கிங் சாலமன் (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரக்ஷித் (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த ஜுரி விருது - விஷ்ணு வர்தன் (ஷெர்ஷா)
சிறந்த பாடலாசிரியர் - சந்திரபோஸ் (தம் தம் தம் - கொண்ட போலம்)
சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத் ( புஷ்பா) , கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த ஒப்பனை கலைஞர் - ப்ரீதிஷீல் சிங் (கங்குபாய் கத்தியவாடி - இந்தி)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வீரா கபூர் (சர்தார் உத்தம் - இந்தி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - சர்தார் உத்தம் (இந்தி)
சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி ( கங்குபாய் கத்தியவாடி - இந்தி)
சிறந்த திரைக்கதை - நயாட்டு (மலையாளம்) , கங்குபாய் கத்தியவாடி (இந்தி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - அவிக் முகோபாத்யாய் (சர்தார் உத்தம் - இந்தி)
சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரேயா கோஷல் (மாயாவா சாயவா - இரவின் நிழல்)
சிறந்த பின்னணி பாடகர் - கால பைரவா (கொமுரம் பீமுரோடு - ஆர்.ஆர்.ஆர் - தெலுங்கு)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பவின் ரபாரி (செல்லோ ஷோ - குஜராத்தி)
சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ் - இந்தி)
சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி (மிமி - இந்தி)
சிறந்த நடிகை - ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி), கிருத்தி சனோன் (மிமி)
சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் - (புஷ்பா - தெலுங்கு)
சிறந்த இயக்குநர் - நிக்கில் மஹஜன் (கோதாவரி - மராத்தி)
சிறந்த குழந்தை திரைப்படம் - காந்தி அன்ட் கோ (குஜராத்தி)
சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு திரைப்படம் - ஆவாசவியூகம் (மலையாளம்)
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' (இந்தி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு)
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது - மெப்படியன் (மலையாளம்)
சிறந்த திரைப்படம் - ராக்கெட்ரி - நம்பி விளைவு (இந்தி)