Published on 17/10/2019 | Edited on 27/04/2020







தர்பார் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் ஆண்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். முழுமையாக 10 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஷ்வர்யா தனுஷுடன் ரிஷிகேஷ் ஆலயங்களில் வழிபடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் காவி வேட்டில் இமயமலை செல்லும் ரஜினி தற்போது நீல டீ-சர்ட் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியவுடன் தர்பார் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது.