Skip to main content

காணாமல் போன மகள்; தோழியால் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:61

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
detective malathis investigation 61

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

1 வாரமாக காணாமல் போன தன்னுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி ஒரு பேரண்ட்ஸ் என்னிடம் வந்தார்கள். பதற்றமில்லாமல் இருந்த அவர்களிடம் விசாரித்த போது, 12ஆம் வகுப்பு படிக்கும் மகளிடம் படிப்பு விஷயத்தில் மற்ற குழந்தைகளோடு கம்பேர் பண்ணி பேசியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. மகளின் தோழியும், மகள் எங்கு இருக்கிறாள் என்பதை சொல்ல மாட்டிக்கிறாள் என்றனர்.

நாங்கள் வழக்கம்போல் அந்த வழக்கை எடுத்து, காணாமல் போன பெண்ணின் தோழியினுடைய அட்ரஸை வாங்கிக்கொண்டு மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். ஆனால், அந்த பெண் அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டாள். இப்படியாக 1 வாரமாக அந்த பெண்ணை ஃபாலோவ் செய்து பார்த்தாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஃபாலோவ் செய்யும் போது, சனிக்கிழமை அன்று வகுப்பை முடித்து மதிய நேரத்தில் அந்த பெண் தன்னுடைய வீட்டுக்குச் செல்லாமல் வேறு ஒரு பாதையை நோக்கி சென்றாள். ஒரு பிஜி ஹாஸ்டலுக்கு சென்று சிறிது நேரம் கழித்து அந்த பெண் திரும்ப வந்துவிட்டாள். அந்த தகவலை வைத்துக்கொண்டு அடுத்த நாள் பிஜி ஹாஸ்டலுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் போது காணாமல் போன அந்த பெண் வெளியே வருகிறாள். ஒரு நெட் செண்டருக்குள் சென்ற அந்த பெண், சிறிது நேரம் அங்கு ஷாட் செய்து விட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள். 

காணாமல் போன பெண், ஹாஸ்டலில் தான் இருக்கிறாள் என்ற தகவலை பெற்றோரை அழைத்து சொன்னோம். பெற்றோரோடு பிஜி ஹாஸ்டலுக்கு சென்று விசாரித்ததில், பேரண்ட்ஸ் யாரும் இல்லை என்று சொல்லிக்கொண்டு தான் அந்த பெண் அங்கு தங்கியிருக்கிறாள் என்ற விபரம் தெரிந்தது. அந்த பெண்ணை பார்த்தபோது அவள், அம்மாவை திட்டினாள். அதன் பிறகு, அந்த அம்மாவை வெளியே விட்டுவிட்டு அந்த பெண்ணிடம் பேசினேன். அவளிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்ததில், எல்லா விஷயங்களிலும் அவளை மற்ற குழந்தைகளோடு பெற்றோர் கம்பேர் பண்ணி பேசியிருக்கிறார்கள். அந்த அழுத்தம் காரணமாக தான் இந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள் எனத் தெரிந்தது. இது பற்றி அவளது அம்மாவிடம் கேட்டபோது அவர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள். அதன்பின், இதெல்லாம் தவறு என அவர்களிடம் பேசி புரியவைத்தேன். பெண்ணிடமும் பேசிய பின்பு, அவள் அவளுடைய பெற்றோரிடமும் செல்வதாக ஒப்புக்கொண்டாள்.