சைபர் புல்லிங்கால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பெண்ணுக்கு சைபர் புல்லிங் நடந்துள்ளது. அதில் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றிவிட்டாலும், பாஸ்டில் இருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை என்று தான் அந்த பெண்ணுடைய பெற்றோர் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக அழைத்து வந்தனர். ஐ.டியில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு பையன் இணையத்தில் இந்த பெண்ணுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறான். ஒரு வருடத்தில் நன்றாக பழகிய பின்பு, நட்புக்கு ஒருபடி மேல் சென்று இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியிருக்கிறார்கள். நெருக்கமானதால் போட்டோஸ் எல்லாம், இந்த பெண் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் நேரடியாக தன்னுடன் வரவில்லை என்றால் போட்டோஸ் எல்லாவற்றையும் இணையத்தில் பகிரப்படும் என்று அந்த இடத்தில் இருந்து மிரட்டிருக்கிறான்.
இந்த விஷயத்தை பெற்றோரிடமும் மறைத்தாலும், பெண் இருக்கும் கஷ்டத்தை கண்டுபிடித்து அதில் இருந்து மகளை வெளியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரிந்த பின்பும் கூட, அந்த பையன் இந்த விஷயத்தை விடுவதற்கு தயாராக இல்லை. அதன் பின்பு, பெண்ணினுடைய பெற்றோர் சைபர் கிரைமுக்கு சென்று புகார் அளித்த பின், இரண்டே நாட்களில் அந்த நபரை அடையாளம் கண்டு பையனை பிடித்துவிட்டார்கள். இந்த சம்பவத்தால், அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தான் பெற்றோர் அழைத்து வந்தனர். இரவில் பயந்து தூங்காமல் இருப்பதால், அந்த பெண்ணுக்கு பெட் வெட் நடக்கிறது.
நடந்த வரை முடிந்துவிட்டது, இனிமேல் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லிக் கொடுத்தேன். நீங்கள் அதில் இருந்து வெளியே வந்து ஸ்ட்ராங்காக இருந்தால் தான் குழந்தையும் அதில் இருந்து வெளியே வர முடியும் என்று சொன்னேன். அதற்காக, அந்த பெண்ணை சோஷியல் மீடியா பயன்படுத்தவே கூடாது என்று கண்டிசனும் போடக்கூடாது. பயத்தால் பெண்ணுக்கு பெட் வெட் இருப்பதால், சைகாட்ரிஸ்டிடம் பெண்ணை காட்டும்படி பரிந்துரைத்தேன். அந்த பெண், என்னிடம் ஆன்லைனில் மீட் செய்தாள். அந்த சிஸ்டமில் அவள் உட்காரும்போதே அந்த பயம் இருந்தது. அதனால், அந்த பெண்ணை நேரடியாக வரவழைத்த போது, அந்த பெண்ணிற்கு பயம் நல்லாவே தெரிந்தது. பாஸ்டை பற்றி பேசாமல், அதில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பதை அந்த பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்தேன்.
இனிமேல் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், சைபர் செக்யூரிட்டி பற்றி படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என அவளுக்கு அட்வைஸ் செய்தேன். இனிமேல், பிரண்ட்ஸுக்கு போட்டோஸ் ஷேர் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும், செய்யலாமா? வேண்டாமா? என்று பல முறை யோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என்றேன். பிரண்ட்ஸுடம் இருக்கும் டிரஸ்ட்டை எல்லாம் அந்த பெண்ணுக்கு எடுகேட் செய்திருந்தேன். பாஸ்டில் இருந்து வெளிவருவதற்கு நிறைய ஆக்டிவிட்டி கொடுத்தேன். அவளுடைய பயத்தை கண்டுபிடித்து, அதை எப்படி ரீபிலேஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஆக்டிவிட்டி சொல்லிக்கொடுத்தேன். இன்னுமும் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து தான் வருகிறேன். இப்போது அவள் ஓரளவுக்கு சரியாக இருக்கிறாள். இருந்தாலும், அவளுக்கு நிறைய செக்ஷன் தேவைப்படுகிறது. மகளை தனியாக விடுவதற்கு கூட பெற்றோர் பயப்படுவதால், நம்பிக்கையில்லாமல் இப்படி செய்கின்றனர் என்று அவள் உணர்ந்தாள். அதனால், மூன்று பேரையும் ஒன்றாக உட்கார வைத்து, அவளுக்கு புரிய வைத்தேன். குழந்தைக்கு நாம் கூட இருக்கிறோம் என்ற தைரியத்தை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.