Skip to main content

மாமியாரால் விலகும் குழந்தை; மருமகள் எடுத்த முடிவு - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :41

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
asha bhagyaraj parenting counselor advice 41

குழந்தைக்கு அதிக செல்லம் கொடுத்த மாமியாருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

ஒரு தம்பதி என்னிடம் வந்து மாமியாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று மருமகள் சொன்னார். குழந்தைக்கு எந்தொரு பவுண்டரிஸ் செட் செய்தாலும், பேரனின் பாசத்தால் மாமியார் அதை உடைக்கிறார். டிவி, செல்போன், சாக்லேட், ஐஸ் கிரீம் என இது போன்ற குழந்தைக்கு தர பெற்றோர் தவிர்த்தாலும், குழந்தைக்கு சாதகமாக அதை கொடுக்க நினைக்கிறார். குழந்தைக்கு அதிகமாக செல்லம் கொடுக்கிறார். தனக்கு சாதகமாக எல்லாமும் கிடைத்துவிடுவதால் குழந்தை எங்களுடன் இருப்பதைவிட மாமியாரிடம் தான் அதிக நேரம் இருக்கிறது. கணவர், மாமியாரிடம் எடுத்துச் சொன்னாலும் மனைவி பேச்சை கேட்பதாக வாக்குவாதம் செய்கிறார் எனச் சொன்னார். 

தானாக கையில் எடுத்துச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மத்தியில், இந்த குழந்தைக்கு இன்னமும் பாட்டி தான் ஊட்டி விடுகிறார். இந்த மாதிரி குழந்தைக்கு, எதிர்காலத்தில் டிசிஸன் மேக்கிங் எடுப்பதில் சிரமப்படும். நான், அந்த பெண்ணின் மாமியாரிடம் பேசினேன். அவரிடம், ஒவ்வொன்றையும் எடுத்துப் பேசி புரிய வைத்ததில் அவர் நன்றாக புரிந்துகொண்டார். தன் கையால் குழந்தை சாப்பிடுவதால் என்ன என்ன பயன் இருக்கும் என்பதை புரியவைத்தேன். 

5 வயது ஆண் குழந்தையின் படிப்பு விஷயத்தில் மருமகள் ஒழுங்காக கவனிப்பதில்லை என குறை கூறுவதால், படிப்பு விஷயத்தில் மட்டும் அந்த குழந்தை அம்மாவிடம் வந்துவிடுகிறான். பாட்டி படிக்க சொல்வதால் இந்த குழந்தை அம்மாவிடம் வந்துவிடுகிறான். மற்றவர்கள் முன்னிலையில் குழந்தையைப் பற்றி குறை கூறுவதால், பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுகிறான். குழந்தையின் குணத்தை சரிசெய்ய மற்றவர்கள் முன்னிலையில், குழந்தைக்கு சப்போர்ட் செய்துவிட்டு, தனியாக இருக்கும் போது குழந்தையிடம் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் இந்த இரண்டு விஷயங்களுமே நடந்திருக்கிறது. குழந்தையின் நடத்தையால் மாமியார், மருமகளுக்குள் பனிப்போர் உருவாகி ஒரு கட்டத்தில் தனிக் குடித்தனம் எடுக்கலாம் என்ற முடிவை மருமகள் எடுத்திருக்கிறார். 

படிப்பு விஷயத்தை தவிர, மற்ற விஷயங்களில் அம்மாவிடம் செய்ய மாட்டேன் என்று குழந்தை கூறியுள்ளது. தான் இல்லாத சமயத்தில் தன்னை பற்றி குழந்தையிடம் பேசுகிறார்கள் என்று எண்ணம் மருமகளுக்கு வந்திருக்கிறது. இதனால், தான் குழந்தை தன்னிடம் இருந்து விலகுகிறான் என்ற எண்ணம் உருவாகிறது. குழந்தைக்கு அம்மா தான் முக்கியம், என்பதை மாமியாரிடம் பேசி புரிய வைத்தேன். உங்களுக்குள் சண்டை வந்தால் அதை நீங்கள் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அந்த இடத்தில் குழந்தை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்றேன். எந்தெந்த இடத்தில் எல்லாம் சாதகமாக இல்லை என்று தோன்றுகிறதோ அந்த இடத்தில் அம்மா அப்பாவே வேண்டாம் , தாத்தா பாட்டி போதும் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பேரக்குழந்தைகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுடைய பிகேவியரில் அபெஃக்ட் செய்யக்கூடாது என ஒவ்வொன்றையும் பேசி புரிய வைத்தேன். அவரும் இதை உடனடியே ஏற்றுக்கொண்டார்.