குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
லேகா என்ற பெண்ணுடைய வழக்கு இது. வடசென்னையை சேர்ந்த இவர் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு, 5 பவுன் நகை போட்டு அவளது அப்பா ஒரு பையனுக்கு கல்யாணம் பன்ணி கொடுத்தார். லேகாவின் கணவர் 1998ஆம் ஆண்டிலேயே, லேகா அடிக்கடி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறாள், சமைத்து கொடுக்க மாட்டிங்கிறாள் என்று விவாகரத்துக் கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை கேட்டு லேகாவின் பெற்றோர் ஒரு பஞ்சாயத்தை கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி கணவரின் வழக்கை வாபஸ் செய்யக்கோரி ஒப்புதல் வாங்கினார்கள். இதுதான் லேகா வாழ்கையில் நடந்த பிளாஸ் பேக்.அதன் பிறகு, 2008ஆம் ஆண்டு லேகா என்னிடம் வந்து, என் கணவர் என்னை விட்டுவிட்டு என் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னால் குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறினாள். சரி உன் கணவர் விளாசம் சொல் என்று கேட்டபோது அவளுக்கு தெரியவில்லை. சரி அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு என்ன நடந்தது என்று கேட்டேன்.
கல்யாணம் ஆனபோது அந்த பையனுக்கு பெரிய வேலையெல்லாம் இல்லை. சில வேலைகளை செய்து வந்த அந்த பையன், மற்றவர்களிடம் வேலை செய்ய பிடிக்கவில்லை என்று சொன்னதன் காரணமாக லேகா, சீட்டு போட்டு சேர்த்து வைத்த பணத்தையும் அவளது அப்பாவிடம் இருந்து கொஞ்டம் பணமும் வாங்கி ட்ரை சைக்கிள் வாங்கி கொடுத்தாள். பணம் வந்ததால் அந்த பையனிடம் நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவன் டைவர்ஸ் கேஸ் போட்டு இருக்கிறான். இதற்கிடையில் தான் அந்த பஞ்சாயத்து பிரச்சனை நடந்துள்ளது. இருந்த போதிலும், லேகா சகித்துக்கொண்டு கணவரோடு வாழ ஆரம்பித்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த பையனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்த பையனுடன் வேலை பார்த்த ஒரு நபர் லேகாவிடம் கூறியதன் பேரில், இதைபற்றி கணவரிடம் கேட்டப்போது அவரும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அந்த பையன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். இந்த நிலையில் தான், லேகா என்னை பார்த்து விஷயத்தை சொன்னார். நான், லேகாவின் தம்பியை அழைத்து அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் தேடி பாருங்கள் குழந்தைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றேன். அதேபோல் லேகாவின் தம்பி, இரண்டு மூன்று நண்பர்களை அழைத்து ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று குழந்தைகளை தேட ஆரம்பித்து குழந்தைகளையும் கண்டுபிடிக்கிறான். அதன் பின்பு, லேகா தனது குழந்தைகளிடம் விவரத்தை கேட்டபோது, தனது அப்பாவிடமே இருந்துக்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பிறகு குழந்தைகளை பின்தொடர்ந்த லேகாவின் தம்பி, முகவரியை தெரிந்துகொள்கிறான். இதையடுத்து, லேகாவின் கணவரும் அந்த வீட்டில் இருப்பதாக லேகாவின் தம்பி கண்டுபிடிக்கிறான். அதன் பிறகு நான், அந்த பையனுக்கு சேர்ந்து வாழ ஒரு மனு போட்டேன். பின்பு லேகாவின் கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதை பார்த்து அந்த பையனும் ஒரு பெட்டீசன் போட்டான். ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு கைவிடப்பட்ட அந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று இந்த பெட்டீசனை அவர் போட்டுள்ளான். இது தொடர்பான நோட்டீஸ் எனக்கு வந்தபோது இந்த 10 வருஷத்திற்கிடையில் லேகாவும் அவரது கணவரும் ஒன்றாக இல்லாமலா இரண்டு குழந்தைகள் வந்தது? என்று அந்த பெட்டீசனை டிஸ்மிஸ் செய்ய கோரி விளக்கம் கொடுத்தோம்.
இதையடுத்து, இரண்டு குழந்தைகளை லேகா பார்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அவர்களை அழைத்து வர நீதிமன்றத்தில் மனு அளித்தோம். அந்த மனு கொடுத்த நாளிலிருந்து லேகாவின் கணவர் அந்த இரு குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொடுத்தார். குழந்தைகள், கோர்ட்டுக்கு வந்தாலும், அப்பாவிடமே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அம்மாவிடம் போக மறுக்கிறார்கள். அதன் பிறகு, நீதிபதி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிடுகிறார். அதன் பிறகு, லேகா குழந்தைகளிடம் பேச முயற்சித்தாலும் அவர்கள் வருவதாக இல்லை. இப்படியே 3,4 வாய்தா சென்றுவிட்டது. அதன் பின்பு விசிடிங் ரைட்ஸ் கேட்டு 5 மாதம் குழந்தைகளை பார்க்க அனுமதி வாங்கினோம். அதன் பின்னர், மெல்ல மெல்ல லேகாவிடம் குழந்தைகள் மீண்டும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். தொடர்ந்து குழந்தைகளை வாரத்தில் இரண்டு நாள் லேகாவின் கஸ்டடியில் வைக்க அனுமதி கேட்டோம் நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது. அப்போது லேகாவின் கணவர், வாரத்தில் இரண்டு நாள் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன் மீதமுள்ள ஐந்து நாட்கள் லேகாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று அனுமதி வாங்கினார்.
லேகாவிடம் ஐந்து நாட்கள் இருந்த பின்பு, குழந்தைகள் இரண்டு நாட்கள் அப்பாவை பார்க்க வருகின்றனர். இப்படியே நாட்கள் செல்ல, அந்த பையன் தொடர்பில் இருந்த பெண், குழந்தைகள் முழுவதுமாக லேகாவுடனே இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். அதன் பிறகு லேகா குழந்தைகளைகளை பாராமரிக்க தனது கணவர் 10,000 பணம் வேண்டுமென நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையில், அந்த பையன் தொடர்பில் இருந்த பெண்ணும் கர்ப்பமாகிறாள். லேகா அனுப்பிய மனுவை பற்றி தெரிந்துகொண்ட அந்த பெண்ணும், இந்த பையனோடு அடிக்கடி சண்டை போட்டு கொஞ்ச கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறாள். இந்த மனு தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த போது, தன்னால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்று அந்த பையன் கூறுகிறான். அதற்கு பிறகு நீதிபதி, லேகாவுக்கும் அவரது கணவருக்கும் சில அறிவுரைகள் கூறினார். பின்பு, தொடர்பில் இருந்த பெண் செல்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்ட லேகாவின் கணவர் மீண்டும் லேகாவுடனே வாழ விருப்பம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெருவதாக கையெழுத்திட்டார். அதன் பிறகு, சந்தோஷமாக தங்களது குழந்தைகளோடு மீண்டும் வாழ்க்கையை தொடங்கினர்.