Skip to main content

ஆசிய கோப்பையை இதற்காக வெல்லவேண்டும்! - பிசிசிஐ தலைவர் கருத்து

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
Khanna

 

 

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்ததோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதிபெற்றுள்ளது. 
 

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
 

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய பிசிசிஐ நியமன தலைவர் சி.கே.கண்ணா, சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, ஆசிய கோப்பையை நாம் வெல்லவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய விதத்தை வைத்து சொல்கிறேன்.. நிச்சயம் நாம்தான் ஆசியக் கோப்பையை வெல்லப் போகிறோம். நல்ல கேப்டன்ஸி மூலம் கிடைத்த இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தோம்” என தெரிவித்துள்ளார்.