Skip to main content

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுதான் மோசம்... நொந்துபோன கோலி ரசிகர்கள்...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் கோலியின் ரன் சேர்க்கை இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

 

virat kohli second worst average

 

 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கோலி 51 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் முறையே 15 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தமாக இந்த தொடரில் கோலி 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் அவரது சராசரி 25 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி ஒரு தொடரில் பெற்ற மிகக்குறைந்த சராசரி இதுவே ஆகும்.

இதற்கு முன்பு கடைசியாக 2009 - 10 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் 40 ரன்கள் அடித்து 20 ரன்களை சராசரி வைத்திருந்தார். இதற்கடுத்து தற்போது சராசரியாக 25 ரன்களை வைத்துள்ளார். கோலியின் இந்த மோசமான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.