டிவில்லியர்ஸை பின்வரிசையில் களமிறக்கியது ஏன் என பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 31-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ், நேற்றைய போட்டியில் ஆறாவது விக்கெட்டிற்கு களமிறங்கினார். இது பெங்களூரு அணி ரசிகர்களைக் குழப்பமடையச் செய்தது. இந்நிலையில், பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
"வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் எனச் சரியான கலவையில் களமிறங்குவது குறித்து விவாதித்தோம். எதிரணியில் இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இருந்ததால், அதன்படியே விளையாட முடிவெடுத்தோம். சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையாது. நாங்கள் எடுத்த முடிவு திருப்தியளிக்கிறது. 170 ரன்கள் என்பது போதுமான ரன்கள்தான்". இவ்வாறு விராட் கோலி கூறினார்.