தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி, இந்த வார இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்தநிலையில், அணியை தேர்தெடுப்பதற்காகக் கூடும் தேர்வு குழு கூட்டத்தில் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொண்டு சில முக்கிய விஷயங்களை விவாதிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், தற்போது இருபது ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருக்கவேண்டும் என கருதுவதாகவும், அதுகுறித்து இந்த தேர்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் சிராஜ் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மாவை தேர்வு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், ரோகித் சர்மாவை துணை கேப்டனாக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் தென்னாப்பிரிக்கா செல்லும் அணியில் இடம்பெறுவார்கள் என்றாலும், அவர்கள் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது சந்தேகமே எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.