ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழத்தி இந்தியா வெற்றி பெற்றது.
சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ரகானே (55), விராட் கோலி (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக ஸ்டோனிஷ் 62 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் 33வது ஓவரில் பந்து வீசியகுல் தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய 43.1 வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.