Published on 26/08/2020 | Edited on 26/08/2020

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் இந்தச் சாதனையைப் புரிந்த முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆண்டர்சன் வசமானது. இதனையடுத்து அவருக்குப் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "இது நம்ப முடியாத ஒரு சாதனை. வாழ்த்துகள் ஆண்டர்சன். வேகப்பந்து வீச்சாளர் 17 வருடத்தில் 600 விக்கெட் வீழ்த்துவது என்பது உங்களுடைய மனஉறுதி, கடின உழைப்பு, துல்லியமான பந்து வீச்சுக்கு சான்றாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.