ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மீது 14 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சச்சின் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சச்சினின் பெயர் மற்றும் லோகோவை தங்கள் நிறுவன விளம்பரங்களில் பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தருவதாக கூறி கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு முதல் அந்நிறுவனம் சச்சினுக்கு தர வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வந்துள்ளது. ஆனால் அவரது புகைப்படங்களையும் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளது.
பல முறை கேட்டும் அந்நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தராததால் அந்நிறுவனம் மீது சச்சின் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான இந்நிறுவனத்தின் பேட்டை தான் தோனி, கெய்ல் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.