உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 11 பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் இன்னும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
அதே நேரம் பாகிஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 ஆம் இடத்தில உள்ளது. இந்நிலையில் அடுத்துவரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெரும் நிலையில் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெரும். ஆனால் இந்திய அணி வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸிட் அலி பேசியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை குறித்து பேசிய அவர், "பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதை இந்தியா கண்டிப்பாக விரும்பாது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடனான போட்டிகளில் இந்திய அணி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது? இந்தியா வேண்டுமென்றே மோசமாக விளையாடியது.
அதேபோலத்தான் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடியது. வார்னர் இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்” என்று கடுமையாக விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.