இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி ''டை'' ஆனதை அடுத்து சூப்பர் ஓவர் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதிலும் இரு அணிகளும் சம ரன்கள் எடுத்த நிலையில் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற ரீதியில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இரு அணிகளும் சமமான ஆத்திரனை வெளிப்படுத்திய போதிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஐசிசி யின் இந்த விதிமுறைகளை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் நியூஸிலாண் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இது பற்றி ஏதும் கூறாத நிலையில், நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் அளித்துள்ள பேட்டியில், "போட்டி சமனில் முடிவடைந்த பட்சத்தில் இரு அணிகளுக்கும் கோப்பையை ஐசிசி பகிர்ந்தளித்திருக்க வேண்டும். மேலும் சூப்பர் ஓவர் விதிகள் மட்டுமின்றி இன்னும் போட்டி தொடர்பான பல விஷயங்களை ஆய்வு செய்து மாற்ற வேண்டியுள்ளது" என தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.