Published on 01/08/2020 | Edited on 01/08/2020

இந்தாண்டு நடைபெற இருந்த 13ஆவது ஐ.பி.எல் போட்டிகள் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் தொடர்ந்து நீடித்து வந்ததால் இந்தாண்டிற்கான ஐ.பி.எல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 13ஆவது ஐ.பி.எல் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அட்டவணை மற்றும் விதிமுறைகள் குறித்தான விரிவான விவரம் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பி.சி.சி.ஐயின் நிர்வாகக் குழுகூட்டம் நாளை கூடுகிறது. இது ஐ.பி.எல் அறிவிப்பிற்குப் பின்னர் கூடும் முதல் கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணையும், வீரர்களுக்கான விதிமுறை விவரங்களும் வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாதா தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர்.