Published on 04/10/2020 | Edited on 04/10/2020

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. டெல்ல கேபிடல்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 88, பிரித்வி ஷா 66, பந்த் 38, தவான் 26 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. வெற்றிக்காக இறுதி வரை போராடிய கொல்கத்தா அணியில் நிதிஸ் ரானா 58, மார்கன் 48 ரன்கள் எடுத்தனர்.