ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
துபாயில் நேற்றிரவு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஸ்டோய்னிஸ் 53, பிரித்வி ஷா 42, ரிஷப் பந்த் 37, ஷிகர் தவான் 32 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் அபாரமாக பந்து வீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியது.