சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்கள் வென்று சாதனை
கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகின் 24 நாடுகளை சேர்ந்த 400 குள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற குள்ள விளையாட்டு வீரர்கள் 15 தங்கம், 10 வெள்ளி, 12 வெங்கலம் என 37 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். இந்தியாவின் மேத்யு, என்ற குள்ள வீரரர் பேட்மிண்டன், பளுதூக்குதல் என பல போட்டிகளில் பங்கேற்று 2 தங்கம், 3 வெள்ளி, வெங்கலப்பதக்கம் என 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.