இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2 வது டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் திங்கள்கிழமை நடந்தது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பீட்டர் மூர் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பரிந்தர் சரண் 4, பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் மந்தீப் சிங் 52 ரன்களும், லோகேஷ் ராகுல் 47 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டுவென்டி - 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலை வகிகின்றன.