இந்திய அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 46.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக கேப்டன் போரன் 38 ரன்களும், எரிக் ஸிவர்க்சின்ஸ்கி 28 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 36.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யுவராஜ் சிங் 51 ரன்களும் (73 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் டோனி 19 ரன்களும் (40 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சேவாக் 39 ரன்கள், காம்பீர் 28 ரன்கள், தெண்டுல்கர் 27 ரன்கள், கோக்லி 12 ரன்கள், யுசூப் பதான் 11 ரன்கள் எடுத்தனர்.