Published on 16/12/2020 | Edited on 16/12/2020
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக களம் இறங்கப்போகும் 11 பேர் யார் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டியில், மயங்க் அகர்வாலோடு பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளார். சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பும்ரா, ஷமி ஆகியோரோடு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் களமிறங்குகிறார். விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா விளையாடவுள்ளார். ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
நாளைய போட்டியில் ஆடப்போகும் 11 வீரர்கள் : விராட் கோலி , ரஹானே, புஜாரா, அஸ்வின், ஹனுமா விகாரி, ப்ரித்வி ஷா, உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி, மயங்க் அகர்வால், விருத்திமான் சஹா.