தான் கிரிக்கெட் விளையாடப் பழகிய குறுகிய இடத்தில், தன் சகோதரர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களை கதிகலங்கச் செய்யும் திறமையுள்ளவராக, வெறும் 19 வயதில் உருவெடுத்தவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷீத்கான். சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கிய அவர், ஒருநாளில் அந்த அணி வெற்றிபெற பேட்டிங்கில் அசத்த, சச்சின் தெண்டுல்கரே உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என புகழாரம் சூட்டினார்.
இந்திய அணியுடனான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட பின், தற்போது ஓய்வில் இருக்கும் ரஷீத்கான், தன் சகோதரர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இங்கு இப்படி எனது சகோதரர்களுடன் விளையாடிதான் நான் கிரிக்கெட்டைக் கற்றுக்கொண்டேன். என் மூத்த சகோதரர் அமீர்கான் பந்தை பெரிதாக ஸ்பின் செய்வதைப் பாருங்கள். நாங்கள் ஃபேமிலி லெக் ஸ்பின்னர்கள் என பதிவிட்டுள்ளார்.
This is how from where I start my ckt playing with brothers at home big bro @amirkhan6362 has some skills to turn the ball #familylegspinners ???? pic.twitter.com/2D47YhW7O5
— Rashid Khan (@rashidkhan_19) June 19, 2018