Skip to main content

பால் டேம்பரிங் : தடைக்கு எதிராக தினேஷ் சண்டிமால் மேல்முறையீடு!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்ட இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், தனது தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். 
 

BallTampering

 

 

 

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, பந்தை மாற்ற நடுவர்கள் முடிவெடுத்தபோது, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வீரர்கள் களத்திற்கு வர மறுத்தனர். இந்நிலையில், தாமதமாக தொடங்கிய போட்டி பின்னர் டிராவில் முடிந்தது.
 

 

 

இந்நிலையில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுடன் போட்டி நடுவர் நடத்திய விசாரணையில், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்கள், அவர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. பந்தை எச்சிலோடு சேர்த்து வேறு ஏதோவொரு பொருளால் சேதப்படுத்தி, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்திருப்பது இதன்மூலம் நிரூபணமானது. தற்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்தும், போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தும் ஐசிசி உத்தரவிட்டிருந்தது.
 

தற்போது, தன்மீது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை நீக்குமாறு தினேஷ் சண்டிமால் ஐசிசியிடம் மேல்முறையீடு செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இலங்கை மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் பார்படாஸ் மைதானத்தில் வைத்து நாளை மறுதினம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.