யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா 83 ரன்களை குவித்து இந்திய அணியை மீட்டெடுக்க உதவினார். இந்த போட்டியில் பாண்டியா 83 ரன்கள் எடுத்தார். அதே போல் பந்துவீச்சிலும் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் பாண்டியா குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கிடைத்தது பெரிய பாக்கியம் என தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர் என்றும், அவரின் திறமையும், செயல்பாடும் நம் அணிக்கு உறுதுணையாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் எனவும் அவர் புகழாரம் கூட்டியுள்ளார்.