Skip to main content

மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஹார்திக் பாண்டியா...நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ...

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

 

gfbs

 

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு சுற்றான ராபிட் ஃபயர் சுற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என கரண் ஜோகர் கேள்வியெழுப்பினார். இதற்கு ஹார்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் சச்சினை விட விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என பதில் கூறினர். அதுமட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்தும் ஹார்திக் பாண்டியா மோசமாக பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலை ஹார்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ, ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.