Skip to main content

ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து புதிய சாதனை! (வீடியோ)

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
Cric

 

 

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளனர் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர்கள். 
 

நியூசிலாந்து நாட்டில் உள்ளூர் அணிகளை இணைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஃபோர்டு கோப்பைக்கான இந்தத் தொடரில் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த லிஸ்ட் ஏ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜோ கார்டர் மற்றும் ப்ரெட் ஹாம்ப்டன் ஆகிய இரு வீரர்கள் முறையே ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் களமிறங்கினர். எதிரணி வீரர் வில்லெம் லூடெக் பந்துவீச இந்த இரு வீரர்களும் எதிர்கொண்டனர். அப்போது 4, 6 (நோ.பா), 6 (நோ.பா), 1, 6, 6, 6 என அடுத்தடுத்து அதிரடியாக பந்துகளை நாலாப்புறமும் பறக்கவிட்டனர். இதன்மூலம், ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்த லிஸ்ட் ஏ புதிய சாதனையை இந்த இரு வீரர்களும் படைத்துள்ளனர். 
 

அதுவரை சீராக பந்துவீசிக் கொண்டிருந்த வில்லெம் லூடெக் 10 ஓவர்களில் 85 ரன்கள் பறிகொடுத்ததற்கு, இந்த ஒரு ஓவரே காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் கார்டர் 102 ரன்களும், ஹாம்ப்டன் 95 ரன்களும் என அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 313 ரன்கள் குவித்திருந்தது. இதற்கு முன்னர் தாக்காவில் நடைபெற்ற லிஸ்ட் ஏ போட்டியில் ஜிம்பாப்வேயின் எல்டன் சிகும்புரா 39 ரன்கள் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது.