Skip to main content

இந்திய அணி அபார வெற்றி

Published on 14/12/2017 | Edited on 14/12/2017

இந்திய அணி அபார வெற்றி

இலங்கையில் இன்று நடந்த முதலாவது ஒரு நாள்  போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய காம்பீர் 3 ரன்களில் அவுட்டானார். சேவக் அதிரடியாக ரன்கள் குவித்தார். 97 பந்துகளில் 96 ரன்களில் அவுட்டாகி 4 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா , கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து ரன் குவிப் பில் ஈடுபட்டனர்.
 
ரெய்னா 45 பந்தில் 50 ரன்கள் குவித்து அவுட்டானார். தோனி 35 ரன்னில் அவுட்டானார். இர்பான ஞூபதான் 7 ரன்னில் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் தில்ஷன் 6 ரன்னிலும், தரங்கா 28 ரன்னிலும் அவுட்டானார்கள். சங்ககாரா சிறப்பாக விளையாடினார் 151 பந்துகளை சந்தித்த அவர் 133 ரன்கள் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே குவித்தனர். சந்திமால்13 ரன்னிலும், கேப்டன் ஜெயவர்த்தனே 12 ரன்னிலும், மாத்யூஸ் 7 , திரிமானே 7 ரன்னிலும் அவுட்டானார்கள். ஹூராத் டக் அவுட்டானார்.
 
பொறுமையாக விளையாடி வந்த பெரரா 44 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

சார்ந்த செய்திகள்