Skip to main content

"கர்நாடக இசைக்கு எந்த டீம் இருக்கிறார்கள்?"- ஹோத்ரா அதிரடி பேட்டி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

"Which team is there for Carnatic music?"- Hotra Action Interview!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவரும், பரத நாட்டியக் கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்தது திரையுலகம் தான். கர்நாடக இசை மீண்டும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால் உள்ளே இருக்கக் கூடிய ஜாம்பவான்கள் வெளியில் வர வேண்டும். இசை குறித்த பாடங்களைக் கல்லூரிகளில் அதிகரிக்க வேண்டும். நிறைய ராகங்களைக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியே வரும் போது ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 50 ராகங்களையாவது கற்றுக் கொள்ள வேண்டும். 

 

சங்கீத இசை ஞானம் உள்ளவர்கள் 100 ராகங்கள் கூடத் தெரியவில்லை என்றால், எப்படி ஒரு சங்கீத மேதை என்று சொல்ல முடியும். 100 ராகங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்பதை விட, கற்றுக் கொடுங்கள் என்கிறேன். வாரத்திற்கு ஒரு ராகம், மாதத்திற்கு ஒரு ராகம் எடுக்கலாமே. அந்த ராகம் குழந்தைக்குப் பாடத் தெரியணும். ராகம் பாடி, ஸ்வரம் பாடி, இதுதான் ராகம் என்று கண்டுபிடிக்கத் தெரிய வேண்டும். எத்தனைப் பேருக்கு ராகத்தைக் கண்டுபிடிக்கத் தெரியும்? பாடல்களைக் கேட்கக் கேட்க யேசுதாஸ் அவர்கள் பாடிக் காண்பித்தார். மூன்று ஸ்தாயிலும் ஒரு ஸ்ருதியில் பாடிக் காண்பித்தார். 

 

அப்பேர்ப்பட்ட ஜாம்பவான் பெரிய வித்வான் என்று சொல்லக் கூடிய இடத்தில் யேசுதாஸ் அவர்கள் இருக்கிறார். ஆனால், அவர் தகுதியுடையவர். இவர் இசையில் மேதை என்று சொல்லக்கூடிய ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறார். இன்றைக்கு ஒருவர் தகுதியுடையவர் என்று நிர்ணயிக்கப்படக் கூடியவர்கள் யார்? கர்நாடக இசைக்கு என்று எந்த டீம் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியுடைவர்களா? அவர்களுக்கு எல்லாமே தெரியுமா? நீங்கள் எப்பேர்ப்பட்ட சங்கீத வித்வான் என்பதை நிர்ணயிக்க மூன்று ஸ்தாயில் பாடிக் காட்டுங்கள். யேசுதாஸ் ஐயா மட்டும் தான் இருக்கிறார் என்று நான் கூறுகிறேன். 

 

யேசுதாஸ் ஐயாவிடம் நீங்கள் கேட்கலாம். அவர் மட்டும் தான் பாடி நாங்கள் கேட்டிருக்கிறோம். கர்நாடக இசை அழிந்து வருகிறது. இன்றைக்கு இதைத் தூக்கி நிறுத்தவில்லை என்றால், இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசவே படாது. அரசு ஏன் பாட முறைகளை அதிகப்படுத்தக் கூடாது? நல்ல ஜாம்பவான்களைத் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக இசைப் பாடல்களை அதிகப்படுத்துங்கள். அவர்களுக்கு கலைச் சார்ந்த விஷயங்களை நிறையக் கொடுக்க வேண்டும். எல்லா மொழிப் பாடல்களையும் அர்த்தங்களுடன் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

அர்த்தமே தெரியாமல் பாடல்களைப் பாடக் கூடாது. ராகம் என்பது தேவதை மாதிரி. ஒரு ராகத்தைத் தேவதையாகப் பார்த்து பாடுகிறார்கள். அதனால் தான் ராகத்தைக் கொலை செய்யாதீர் என்கிறார்கள். இன்றைக்கு மக்கள் சோகமாக இருந்தாலும் பாட்டு தான். சிரித்துக்கிட்டு இருந்தாலும் பாட்டு தான். பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் எல்லா விதமான பாட்டும் தமிழர்கள் எல்லா விதமான பாட்டும் அந்தக் காலத்திலேயே இயற்றிவிட்டுச் சென்று விட்டனர்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.