இன்று டீ கடைகளுக்கு சென்றோம் என்றால் டீ போடுபவரிடம் சொல்வது சுகர் கம்மியா டீ அல்லது காபி போடுங்கனு தான் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் இன்று உள்ள மனிதர்களிடம் பரவிக் கிடக்கிறது. உலகைப் பயமுறுத்தும் முக்கிய மான நோய்களுள், முன்னணி வகிப்பது இந்தச் சர்க்கரை நோய்தான்... இதை நோய் என்று அழைப்பதைவிட குறைபாடு என்றே அழைக்கலாம்.உடனிருந்தே கொல்லும் நண்பன்போல், உங்கள் உள்ளிருந்தே கொல்லும் நண்பன்தான் சர்க்கரைநோய். உடம்பின் ஆதாரண சக்திகள் யாவற்றையும் அழித்து, உடலையே நீராய் இழியச் செய்யும் தன்மை கொண்டது.நம்மில் வயசு வித்தியாசம் இல்லாமல் இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த நோய் உள்ளது .
இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.
கீழ்கண்ட காரணங்கள் சர்க்கரை நோய் வர ஏதுவாகலாம்.
1. பரம்பரை ஒரு காரணமாகலாம்.
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத தன்மை பெற்ற வாழ்க்கை நிலையும் ஒரு காரணமாகலாம்.
3. நகர்புற வாழ்வியல் சூழல், சர்க்கரை நோய்வர மிகுதியான காரணமாகிறது.
4. முறையற்ற உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், புகைப் பழக்கம், போதைப்பழக்கம் இவையும் காரணமாகலாம்.
5. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப்பொருட் கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் கொள்ளும் பொழுது இந்நோய் வர சாத்தியமாகிறது.
இறுதியாக நீரிழிவு (உண்ஹக்ஷங்ற்ங்ள்) வர, உடலைக் கெடுக்கும் பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த காரணமாக இந்தச் சர்க்கரைநோய் என்று முடிவுக்கு வரலாம்.
சர்க்கரை நோய் யாருக்கு வரும்...?
சித்த மருத்துவ சாஸ்திரம் பின்வரும் காரணங்களை நோய்க்கான காரணிகளாக வகைப்படுத்துகிறது. அதிக அளவில் இனிப்புச் சுவையுள்ள பொருட்களை உண்ணுதல். நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டி றைச்சி போன்றவற்றை அதிக அளவில் உண்ணுதல். வேகாத உணவுப் பொருட்கள், வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற மந்தப் பொருட்களை அதிகம் உண்ணுதல். அடிக்கடி உடலுறவில் ஈடுபடுதல், உணவு உண்டதும் உடலுறவு கொள்ளல் போன்ற காரணிகளால், சர்க்கரை நோய் தோன்றுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை முறை மூலம் இதனை கட்டுப் படுத்தலாம் .