Skip to main content

யாருக்கு எவ்வளவு ஓட்டு, கூகுளின் புதிய அப்டேட்...!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

பயணத்தின்போது நமக்குத் தெரியாத வழிகளின் வழியைக் கண்டுபிடித்து, இதுவரை பயணத்தை மட்டும் எளிமையாக்கிவந்த கூகுள் மேப் (Google map) தற்போது புதிதாக அதில் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இருசக்கர வாகனங்களுக்கு என்றே பிரத்தேயகமாக கூகுள் மேப் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதையும் தாண்டி தன் வாடிக்கையாளர்களின் வார இறுதி நாட்களை கொண்டாடும் விதமாக இந்த அப்டேட்டை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. 

 

google

 

வாரத்தின் ஐந்து நாட்களும் வேலை செய்துவிட்டு வார இறுதி நாட்களில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ எங்காவது செல்லலாம் என்று நாம் நினைத்துத் திட்டமிடும்போது சினிமா, ஷாப்பிங் என்று பலத் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனாலும் இறுதியாக அந்தப் பயணம் முடிவது ஹோட்டலாகத்தான் இருக்கும். அதே சமயம் திடீர் என்று மாலை, வேலையை முடித்துவிட்டு நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்று மகிழ்வோம் என்று நினைத்தாலும், அதில் மிகப்பெரிய பிரச்சனை நம்மைச்சுற்றி பல ஹோட்டல்கள் இருக்க அதில் ஒவ்வொருவர், ஒவ்வொன்றை சொல்லுவார்கள் அதில் இறுதி முடிவை எடுப்பதுதான் கடினம். இதற்குத்தான் கூகுள் மேப் இப்போது அதன் செயலியில் கூடுதலாக ஒரு வசதியை சேர்த்திருக்கிறது.

 

எப்போதும் போல் கூகுள் மேப்பிற்குள் சென்று அதில் இருக்கும் லொக்கேஷன் புள்ளியை நமக்கு விருப்பமான ஹோட்டலில் அழுத்திபிடிக்க வேண்டும். அப்படி அழுத்தி பிடித்ததும் உங்களுக்கு யாருடன் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியல் வரும். பின் அதில் இருக்கும் நபர்களும் அவர்களுக்கு விருப்பமான ஹோட்டல்களை தேர்வு செய்யலாம். அதில் ஒரே ஹோட்டலை அதிக நபர்கள் யார் தேர்வு செயகிறார்களோ அந்த ஹோட்டலை, உங்கள் படியலில் இருக்கும் நபர்களுக்கு பச்சை நிறத்தில் லொக்கேஷனில் காட்டும். பிறகு அதிகமானோர் தேர்வு செய்யும் ஹோட்டலுக்கே அனைவரும் செல்லலாம். எளிமையாக சொல்ல வேண்டும் தாங்கள் விரும்பியதை நண்பர்களுடன் பகிர்ந்துகொன்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தி அதிகமானோர் வாக்களிக்கும் ஹோட்டலுக்கு செல்லலாம்.