கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும், சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
சின்ன குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது கண்களை பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு கண் குறைபாட்டை சொல்லத் தெரியாது. பெற்றோர்கள் கண் மருத்துவர்களை அணுகி பரிசோதித்து குறைபாடு ஏதாவது இருந்தால் ஆரம்பத்திலேயே கண்ணாடி அணிவித்து கண் வளர்ச்சி தன்மையை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே பரிசோதிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் ஒரு கண்ணில் குறைபாடு இருந்தாலும் கூட அது ‘சோம்பேறி கண்’ என்ற நிலையை அடையும். ஃபோனை அதிகம் பயன்படுத்த விடாதீர்கள். அதனால் கண்களில் கட்டியெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வகை கட்டிகள் சூட்டுக் கட்டிகள் ஆகும். 18 வயது வரை அதிகம் ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பிறகு கண் வளர்ச்சித் தன்மை நிலைபெற்றுவிடும்.