Skip to main content

பல நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணமா? - டாக்டர் சங்கர் விளக்கம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Dr Sankar Health tips

 

உடலின் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் மருத்துவத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட பிரபலமான டாக்டர் சங்கர் விளக்குகிறார்

 

மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல்வேறு மருந்துகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் கிலோ கணக்கில் உடலுக்குள் செலுத்தும் மருந்துகளும் இருக்கின்றன. இந்த மருந்துகளால் கண் பாதிப்புகளிலிருந்து ஒருவரை பெருமளவு குணப்படுத்த முடியும். பல மாத்திரைகள் செய்யும் வேலையை ஊட்டச்சத்து மருந்துகள் செய்துவிடும். அனைத்து வகையான உணவுகளையும் சரியான அளவில் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடுவது தவறு. சிகிச்சைக்கு வரும்போது உணவில் செய்ய வேண்டிய மாற்றங்களை நாங்கள் பரிந்துரைப்போம்.

 

ஆரம்பகட்ட சர்க்கரை நோயில் இருப்பவர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையின் மூலமாகவே சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் குறைந்தது 8 மணி நேரம் நிச்சயம் தூங்க வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூரிய வெளிச்சத்தில் இருந்து வரும் வைட்டமின் டி சக்தியை உள்வாங்கும் தன்மை தெற்காசியர்களுக்கு குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன. அதனால் சிலர் தனியாக வைட்டமின் டி மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய நிலைமை உள்ளது.

 

இயற்கையோடு இணைந்து வாழ்வதன் மூலம் கெடுதல் தரும் விஷயங்களிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். உடலுக்குத் தேவையான எதுவுமே அதிகமாக இருந்தால் அதை நச்சுக்கள் என்கிறோம். அனைவரும் உட்கொள்ளும் பாராசிட்டமால் மாத்திரையை அதிகமாக உட்கொண்டால் அதுவும் நச்சு தான். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் வேலையை நம்முடைய கல்லீரல் செய்கிறது. சாதாரண மினரல் வாட்டர் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் வருவதால் அதில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறது. அந்தக் காலத்தில் நச்சுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. 

 

இப்போது பரவும் நச்சுக்களால் கேன்சர் வரும் அபாயமும் இருக்கிறது. அளவுக்கு அதிகமான பாக்டீரியாக்களை நம்முடைய உடலால் தாங்க முடியாது. உடலில் உள்ள நச்சுக்களை மாத்திரை மருந்துகளின் மூலம் வெளியேற்ற முடியும். பொதுவாக ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை அவரே சொன்னால் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் கண்டுபிடிக்க முடியும். மனதுக்கு அமைதி தரும் நடவடிக்கைகளின் மூலம் அந்த ஹார்மோன்களின் அளவை நம்மால் குறைக்க முடியும். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணம்.