உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அதிகம் புகை பிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதொடர்பாக சீனா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், " புகை பிடிப்பவர்களின் நுரையீரல் அந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கரோனா வைரஸால் அந்த குறிப்பிட்ட நபர் பாதிக்கப்பட்டால் அவரின் நுரையீரல் மிக மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. மேலும் புகை பிடிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அவர்களால் கரோனா வைரஸை எதிர்த்துப் போராட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.